இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு!

மும்பை (24 ஜன 2020): இந்தியாவில் இருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால்…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (24 ஜன 2020): நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி நடைபெற்று வருகின்றன. டெல்லி மாணவி நிர்பயா கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளில் நான்கு பேரின் தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 4 பேரும் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை…

மேலும்...

சிறுவனுடன் சல்லாபம் – ஆசிரியை கைது!

நியூயார்க் (24 ஜன 2020): அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா, 24. இந்தியரான இவர், ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும், 13 வயது சிறுவனுக்கும் அந்த ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது. மேலும் அந்த சிறுவனுக்கு மொபைல் மூலம் ஆபாச படங்களை அனுப்பி,…

மேலும்...

அமித் ஷா உள்ளிட்ட எம்பிக்களின் சொத்து விவரம் எங்கே? – தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி!

புதுடெல்லி (24 ஜன 2020): உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 எம்பிக்கள் இதுவரை சொத்து விவபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், 90 நாட்களுக்குள் தங்களது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து, வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்கள், தங்களுடன் இருக்கும் பிள்ளைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 2019ம் ஆண்டு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர் – சிஏஏ வை மாற்றி அமைக்க கோரிக்கை!

கொல்கத்தா (24 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார், மேற்கு வங்க பாஜக துணைத் தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேரனுமான சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸூன் 123-வது பிறந்தநாள் நேற்று (ஜனவரி 23) நாடு…

மேலும்...

நீங்கள் ஹல்வா என்றால் நான் மிளகா – நிர்மலா சீதாராமனின் ஹல்வா விழாவை கிண்டல் செய்த உவைசி

புதுடெல்லி (23 ஜன 2020): மத்திய நிதியமைச்சகம் கொண்டாடிய ஹல்வா விழாவை அசாதுத்தீன் உவைசி கிண்டலடித்துள்ளர். மத்திய நிதி அமைச்சகம் ஹல்வா விழாவை அதன் தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த விழாவிற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிலையில் இந்த விழா குறித்து கறீம் நகரில் பேசிய உவைசி, “ஹல்வா என்பது இந்தியாவின் எந்த மொழியிலும் உள்ள வார்த்தை கிடையாது….

மேலும்...

ரூபாய் 100 கோடி மான நஷ்ட வழக்கு – அசாருதீன் எச்சரிக்கை (VIDEO)

மும்பை (23 ஜன 2020): தன் மீது பதியப்பட்ட வழக்கிற்கான மான நஷ்ட ஈடாக, ரூ. 100 கோடி கேட்டு வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் தெரிவித்துள்ளார். மகாரஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் அசாருதீன் மற்றும் இருவர் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக, டிராவல் உரிமையாளர் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை மறுத்துள்ள அசாருத்தீன் இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:…

மேலும்...

மோடி அமித்ஷாவுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜ்நாத் சிங்!

மீரட் (23 ஜன 2020): இந்திய முஸ்லிம்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மீரட்டில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது யாராக இருந்தாலும் சரியே என்றார். மேலும் குடியுரிமை சட்டம் எதிர்கட்சிகளால் சிறுபான்மையினருக்கு எதிரானதுபோல் திசை திருப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அமித் ஷா, யோகி…

மேலும்...

ஷார்ஜாவில் தவற விட்ட மொபைல் போன் இந்தியாவில் கிடைத்த அதிசயம்!

ஷார்ஜா (23 ஜன 2020): ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பெண் ஷார்ஜா விமான நிலையத்தில் அவரது மொபைல் போனை தவற விட்டுவிட்டார். இந்தியாவுக்கு சென்ற அந்த பெண் அங்கு அவரது ட்விட்டரில் அவரது போனின் புகைப்படத்தை பதிவிட்டு காணாமல் போனது பற்றி தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஷார்ஜா விமான நிலைய போலீசுக்கு கிடைத்தது. உடனே ஷார்ஜா போலீஸ் விமான நிலையத்தில் போனை தேடி கண்டுபிடித்து. உடனே உரியவரிடம் ஒப்படைக்கும் வகையில் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்….

மேலும்...

பெங்களூரில் பயங்கரம் – வெடித்துச் சிதறிய மர்ம பொருள்: எம்.எல்.ஏ ஹாரிஸ் படுகாயம்!

பெங்களூரு (22 ஜன 2020): பெங்களூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மர்ம பொருள் வெடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பெங்களூரு சாந்திநகரில் உள்ள வண்ணார்பேட்டை பஜார் தெருவில், நடந்த பிறந்தநாள் விழாவிற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ ஹாரிஸ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அப்போது இரவு 8.30 மணியளவில், திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில எம்.எல்.ஏ ஹாரிஸ் உட்பட 7…

மேலும்...