தஞ்சை மாவட்டம் மேலக்காவேரியில் நடைபெற்ற சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம்!

தஞ்சாவூர் (05 ஜூன் 2020): உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், மேலக்காவேரி பகுதியில் “சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம் “என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். கவிஞர் மு அய்யூப்கான் வரவேற்று பேசினார். “சுற்றுசூழல்களை நேசிப்போம் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல்காதர், மு.அப்துல்அஜீஸ் ,பயாஸ் அஹமது ,பொறியாளர்.மைதீன் பாட்ஷா உட்பட பலரும் பேசினார்கள். நிகழ்ச்சியை ஒட்டி மரக்கன்றுகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு உரையும், மரப்பிள்ளைகளும் நடப்பட்டன. மேலும்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

சென்னை (04 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜே. அன்பழகன் 80 சதவீதம் வெண்டிலேஷன் உதவியிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் , ஜூன் 2 ஆம் தேதி இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட்…

மேலும்...

சிலிண்டர் தொகையை காட்டிலும் கூடுதல் தொகை வசூல் – கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு!

கும்பகோணம் (04 ஜூன் 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகர மேலக்காவேரி பகுதி மக்கள் நலன்களுக்காக பல்வேறு துறை அலுவலர்களை சந்தித்து முறையிடப்பட்டது. நேற்று 3.6.2020 புதன் காலை 10:00 மணியளவில் தொடங்கி, கும்பகோணத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலக்காவேரி பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளை (சிலிண்டர்) வழங்குபவர்கள் ரசீது தொகையை காட்டிலும் கூடுதலாக சிலிண்டருக்கு பணம் வசூலிக்கும் செயலை தடுக்க கோரி மனு அளிக்கபட்டது, அதற்கடுத்ததாக மேலக்காவேரி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார…

மேலும்...

சென்னை திருச்சி விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு தமிழர்கள் தொடர்பு கொள்ள தமுமுக உதவி எண் அறிவிப்பு!

சென்னை (04 ஜூன் 2020) வெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவும் முகமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: தாம்பரம் எம்.யாக்கூப் 9710217545 துணைப் பொதுச் செயலாளர், மமக எஸ்.கே.ஜாகிர் உசேன் 9884444350 மாவட்ட தலைவர், செங்கல்பட்டு வடக்கு, தமுமுக-மமக திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்: உதுமான் அலி 98944 44772 மாவட்ட…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் திமுக-வின்…

மேலும்...

கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் கண்டிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): கொரானா நோய் தொற்றோடு வாழப் பழகச் சொல்லி மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்புகளை தட்டிக் கழித்து வரும் வேளையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின் உடல்நலத்திலும், பாதுகாப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அதிக முக்கியத்துவம் அளித்து மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும் என கமல்ஹாசன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தலைவரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக, தமிழகத்திலேயே முன்னோடியாக மக்கள் அதிகம் வருகை…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!

சென்னை (03 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜுன் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதல் ஆசிரியர்கள் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்…

மேலும்...

பைக்கில் இருவர் பயணித்தால் அபராதம் – எச்சரிக்கை!

சென்னை (03 ஜூன் 2020): கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 500 முதல் 950 வரை நோய் தொற்று உயர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும்…

மேலும்...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்வு!

சென்னை (02 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஜூன் 2 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன….

மேலும்...

சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஜூன் 2020): சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னையில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும்...