தமிழகத்தில் நாளை முதல் பிறப்பிக்கப் பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் சிறப்பம்சங்கள்!

சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன் சிறப்பம்சங்கள்: 26-ஆம் தேதி நடைபெறவிருந்த 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையே கால் டாக்ஸிகள் இயங்க அனுமதி ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்க அனுமதி வங்கிகள், ஏடிஎம் மையங்கள் செயல்படும் உணவகங்களில்…

மேலும்...

கொரோனா எதிரொலி – ஈரோட்டில் தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் சென்ற பகுதிகள் முழுவதும் மூடல்!

ஈரோடு (23 மார்ச் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் சென்று வந்த 9 வீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மத வழிபாட்டிற்காக வருகை புரிந்தனர். அவர்கள் ஈரோடு கொல்லம்பாளையம் சுல்தான் பேட்டை மசூதியில் தங்கி, மத வழிபாட்டில் ஈடுபட்டனர். அவர்களில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஈரோடு…

மேலும்...

விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சிலருக்கு தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது. இந்நிலையில், ‘வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்’ என்று தமிழக அரசு, சிலருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்!

நாகர்கோவில் (22 மார்ச் 2020): நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மரணம் அடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பி வந்த 49 வயதுடைய ஒரு ஆண், 9 மாத குழந்தை, கேரளத்தில் இருந்து வந்த 26 வயதுடைய ஒருவர் 59, 52 வயதுடைய 2 என 5 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பப்பட்டிருந்தது….

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

சென்னை (22 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “தமிழகத்தில் புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவிலிருந்து வந்த 63 வயதுப் பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். துபையிலிருந்து வந்த 43 வயது ஆண் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருவரது உடல்நிலையும்…

மேலும்...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி பறிப்பு!

சென்னை (22 மார்ச் 2020): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பால் வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இருந்தபோதும் அவ்வப்போது பாஜகவினரையே விஞ்சும் அளவுக்கு பாஜக ஆதரவு கருத்துக்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

சுய ஊரடங்கு கடைபிடிக்கும் நாளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தமுமுக!

சென்னை (22 மார்ச் 2020): சுய ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கும் மக்களில் ஆதரவற்றவர்ளுக்கும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் தமுமுகவினர் உணவு வழங்கி ஆதரவளித்தனர். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது….

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்வு!

சென்னை (22 மார்ச் 2020): தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 341 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

மேலும்...

கொரோனா – கேரள முதல்வரின் திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

சென்னை (21 மார்ச் 2020): கொரோனாவை எதிர் கொள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ள திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “மார்ச் 22 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்….

மேலும்...

கனிகா கபூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவருக்கு கொரோனாவா?

புதுடெல்லி (21 மார்ச் 2020): கனிகா கபூர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பின், அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100…

மேலும்...