புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு!

புதுச்சேரி (21 மார்ச் 2020): கொரோன வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஒருவாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளியில் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவு…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர். மூன்று பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு!

சென்னை (21 மார்ச் 2020): தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா பாதிப்பு எதிரொலியாக, தற்போது 9ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அதனை ஒத்திவைக்க வேண்டும் என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேரவையில் இன்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 10ஆம் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக…

மேலும்...

கும்பகோணம் அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய டாக்டர்!

கும்பகோணம் (21 மார்ச் 2020): கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்…

மேலும்...

கோழி இறைச்சி கடைக்கு சீல்!

புதுச்சேரி (21 மார்ச் 2020): புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சலுகை விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்து, கூட்டத்தை கூட்டிய கடைக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கோழிஇறைச்சியால் கொரோனா பரவவில்லை என்பதை தெரிவிப்பதற்காக, சலுகை விலையில் கோழிகள் விற்கப்படுவதாக அக்கடையில் விளம்பரம் வைக்கப்பட்டது. இதை பார்த்து நூற்றுக்கணக்கான மக்கள் கடை முன்பு கூடினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதெனக்கூறி, கூட்டத்தை கலைத்ததோடு, கோழிக்கடைக்கு…

மேலும்...

கொரோனாவை பயன்படுத்தி ஏமாற்றி பணம் பிடுங்கும் மருந்துக் கடைக்கு சீல்!

புதுக்கோட்டை (21 மார்ச் 2020): புதுக்கோட்டையில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் புதுகை மாவட்ட அலுவலர்கள் பலரும் கடந்த சில தினங்களாக களப்பணியாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர் நகரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில்…

மேலும்...

கொரோனா குறித்து வீண் வதந்தி – ஹீலர் பாஸ்கர் கைது!

கோவை (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்து வீண் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், ஹீலர் பாஸ்கர் கொரோனா குறித்து பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் “இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா. நம்முடைய மக்கள் தொகையைக் குறைக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். ரசாங்கம்தான் விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். நோய் பாதிப்பு இல்லாதவர்களையும் அழைத்துச் சென்று, ஊசி போட்டு…

மேலும்...

கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பிளஸ் டூ தேர்வுகள் ஒத்தி வைப்பு!

திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால்…

மேலும்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி!

விருதுநகர் (20 மார்ச் 2020): விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வின் காரணமா பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது இந்த விபத்தில்…

மேலும்...

கொரோனாவை எதிர் கொள்ள கேரள அரசு அதிரடி நடவடிக்கைகள்!

திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸை எதிர் கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில்…

மேலும்...