என்பிஆர் தமிழகத்தில் நிறுத்தி வைப்பு – அமைச்சர் உதயகுமார் தகவல்!

சென்னை (13 மார்ச் 2020): மத்திய அரசு இதுவரை தமிழக அரசின் கோரிக்கைக்கு பதிலளிக்காததால் என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், என்பிஆரை பழைய முறையில் அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் என்பிஆர் சட்டத்தை அமல் படுத்துவதில் இஸ்லாமியர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்போம், 3 கேள்விகள் இருக்காது, மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. நேற்று சட்டப்பேரவையில்…

மேலும்...

எனக்கு பதவி வேண்டாம் ஆனால் கட்சி வேண்டும் – மீண்டும் குழப்பிய ரஜினி!

சென்னை (12 மார்ச் 2020): முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை, ஆனால் கட்சியை தொடங்கி அதன் மூலம் ஒருவரை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவரது ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சுமார் 1 கோடி தொண்டர்களை இலக்கு வைத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்தது. இதற்கிடையே அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி புதிய கட்சி தொடங்காமல் இருப்பது அவரது…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி…

மேலும்...

நூறு வருஷம் வாழ அமைச்சர் சொல்லும் அடடே தகவல்!

சென்னை (12 மார்ச் 2020): மீன் சாப்பிட்டால் நூறு வருஷம் வாழலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என்பது வெறும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு…

மேலும்...

நேர காலம் பார்த்து நிதானமாக ஆதரவளித்த ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவளித்தார். சென்னை, வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் மற்றும் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 27 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை…

மேலும்...

அரசியலுக்கு வருவதாக நான் சொல்லவே இல்லை – ரஜினி விளக்கம்!

சென்னை (12 மார்ச் 2020): நான் 2017 க்கு முன்பு அரசியலுக்கு வருவதாக சொல்லவே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “25 வருடமாகவே அரசியலுக்கு வருவதாக என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் அப்படி எப்போதுமே சொல்லவில்லை. எதுவானாலும் அவன் கையில் உள்ளது என்று மட்டுமே கூறியுள்ளேன். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு,…

மேலும்...

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு!

சென்னை (12 மார்ச் 2020): தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில்,…

மேலும்...

அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன. கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது. பெரும்பாலான மொபைல் போன் எண்களைத்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

சென்னை (11 மார்ச் 2020): தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். எல் முருகன் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும்,…

மேலும்...

மோடிக்கு கொரோனா ஆதரவு – எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும்…

மேலும்...