பஞ்சாயத்து தலைவராக வித்தியாசமாக பதவியேற்ற 70 வயது முன்னாள் தலைமை ஆசிரியர்!

கரூர் (10 ஜன 2020): கரூர் அருகே ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இருப்பினும் இவருடன்…

மேலும்...

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர்தானம்!

சென்னை (09 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக அதிக வாய்ப்பு மஹாலக்ஷ்மிக்கே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜ.க-வுக்கு அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளவர் என்று சிலரின் பெயர்களை அவ்வப்போது பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் பரப்பி வருகின்றனர். ஆனால், `அவர்களெல்லாம் கிடையாது. அடுத்து தலைவராகப் போகிறவர் எங்கள் அக்காதான்’ என்கிறார்கள் மஹாலக்ஷ்மியின் ஆதரவாளர்கள். “பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். பல மொழிகள் தெரியும். இவர் படிக்காத படிப்பே இல்லை,…

மேலும்...

மோடியின் தொகுதியான வாரணாசியில் ஏபிவி படுதோல்வி!

வாரணாசி (09 ஜன 2020): வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில்…

மேலும்...

எச்.ராஜா பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடுங்கோபத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (09 ஜன 2020): காமெடி பீசாக இருந்து கொண்டு கட்சி பெயரை கெடுக்கிறார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா மீது அமித் ஷா கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி எச் ராஜா தலைமையில் சமீபத்தில் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியது பாஜக. இந்த போராட்டத்தில் சொற்ப ஆட்களே கலந்து கொண்டனர். இது பாஜக தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா,…

மேலும்...
போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - பரிதவிக்கும் துபாய் கணவன்!

போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு – பரிதவிக்கும் துபாய் கணவன்!

சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நர்மதா சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நர்மதாவுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது ஜனார்த்தனனுக்கு தெரிய வந்தது. இதனை தட்டிக் கேட்ட ஜனார்த்தனுக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளுக்காக…

மேலும்...
சென்னை புத்தக கண்காட்சி - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை புத்தக கண்காட்சி – பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை (09 ஜன 2020): சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ”புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” என்று லெனின் கூறியிருக்கிறார். “உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு” என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லியிருக்கிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகங்களை அதுவும் லட்சக்கணக்கில் ஒரே இடத்தில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் வெறும் காட்சிக்கு மட்டுமல்ல விலைக்கு வாங்கிச்…

மேலும்...

கன்னியாகுமரியில் பரபரப்பு – காவல்துறை அதிகாரி சுட்டுக் கொலை!

களியக்காவிளை (09 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரைச் சோதனை செய்ய தடுத்து நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய…

மேலும்...

முஸ்லிமாக மாறத் தயார் – நடிகர் ராதாரவி!

சென்னை (08 ஜன 2020): குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தால் நான் முஸ்லிமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது சுயநலத்திற்காக கட்சி தாவும் ராதாரவி, திராவிட பாரம்பர்ய கொள்கையை அடகு வைத்து பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் பேசிய ராதாரவி , “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன், இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன். குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி…

மேலும்...

இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் ஊராட்சி தலைவரான முஸ்லிம்!

புதுக்கோட்டை (08 ஜன 2020): இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் முஸ்லிம் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தில் இந்துக்கள் அதிக சதவீதத்தில் வசிக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த கிராமத்தில் ஜியாவுதீன் (45) என்பவர் அதிக வாக்குகள் பெற்று ஊராட்சி தலைவரானார். இந்த வெற்றி குறித்து பேசிய ஜியாவுதீன்,”எங்கள் கிராமத்தின் முக்கிய தேவை, காவிரி நீர். இதைக் கொண்டு வந்து எங்கள் ஊரில்…

மேலும்...