புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

புதுச்சேரி (22 பிப் 2021): புதுவை சட்டசபையில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து…

மேலும்...

ஒரே நாளில் காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா!

புதுச்சேரி (21 பிப் 2021): புதுச்சேரியில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் . காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று ராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நன்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின்…

மேலும்...

ஒரேயொரு பார்வையாளருடன் பாஜக பொதுக்கூட்டம் – காலியான நாற்காலிகளுடன் வைரலாகும் புகைப்படம்!

திருவனந்தபுரம் (20 பிப் 2021): பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் ஏழு பேர் மேடையில் அமர்ந்திருக்க ஒரேஒருவர் மட்டும் பாரவையாளராக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜக எம்பி சசிதரூர் #BJPThePartyIsOver என்ற ஹேஷ்டேக்குடன் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். படம் எங்கே, எப்போது படமாக்கப்பட்டது என்று சஷி தரூர் சொல்லவில்லை. ட்வீட்டுக்கு கீழே சுவாரஸ்யமான கருத்துகளும் உள்ளன. கீழே அமர்ந்திருப்பவர் தலைவர். மேடையில் உள்ளவர்கள் உண்மையில் சாதாரண மக்கள். பாஜக மக்களை மேம்படுத்துகிறது. என்று கமெண்டுகள் குவிகின்றன. ஆனால்…

மேலும்...

போதை மருந்து வழக்கில் பாஜக பெண் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது!

கொல்கத்தா (20 பிப் 2021): கொக்கெய்ன் வைத்திருந்த பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 100 கிராம் கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுடன் அவரது நண்பர் பிரபீர் குமார் தேயும் கைது செய்யப்பட்டார். ‘பமீலா சில மாதங்களுக்கு முன்பு, போதை பொருள் மாஃபியா கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி . சிலரை போதைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்கு பிரபிர் பாமீலாவிற்கு உதவியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்ட தேடலின் போது அவர்கள் கைது…

மேலும்...

பஞ்சாப் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா – பரபரப்பில் அமித் ஷா!

புதுடெல்லி (18 பிப் 2021) : பஞ்சாப் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து பாஜக உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பஞ்சாபின் பல பகுதிகளில், பாஜக…

மேலும்...

31 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கும் பாஜக!

பருச் (12 பிப் 2021): குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை வழங்கியுள்ளது. பருச் மாவட்டத்தில், பாஜக 31 வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இவர்களில் 17 பெண்கள் அடங்குவர். இந்த மாவட்டத்தில் முதல் தடவையாக பாஜக பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை பருச் மாவட்ட பாஜக தலைவர் மாருதி சிங் அடோதரியா தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தற்போது காங்கிரஸ் கையில் உள்ளது இது இப்படியிருக்க ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM…

மேலும்...

இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் – குலாம் நபி ஆசாத் பரபரப்பு பேட்டி!

புதுடெல்லி (12 பிப் 201): 1979 பொதுத் தேர்தலில், 95 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஒரு இந்து வேட்பாளரையே தோற்கடித்தவன் நான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ல் முடிவடைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி…

மேலும்...

கையில் பணமில்லை – பகீர் கிளப்பும் முன்னாள் பிரதமர்!

பெங்களூர் (11 பிப் 2021): : தேர்தல் செலவினங்களுக்கு பணம் இல்லாததால் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜே.டி (எஸ்) போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதி மற்றும் பசவகல்யன், சிண்ட்கி மற்றும் மஸ்கி சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும். இடை தேர்தல் குறித்து அவர் தெரிவிக்கையில், “இப்போதைக்கு இடைதேர்தல் குறித்து சிந்திக்கப்போவதில்லை. அதற்கு செலவு செய்ய பணமும் இல்லை. 2023 தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்….

மேலும்...
Mamta-Banerjee

நீங்கள் செய்துதான் பாருங்களேன் – பாஜகவுக்கு மம்தா சவால்!

கொல்கத்தா (11 பிப் 2021): மேற்கு வங்கத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் மாதாவுக்கு இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வாங்க சட்டமன்றத் தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவார் என்று தெரிவித்திருந்த. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் பாஜகவால்…

மேலும்...

குஷ்பூ கட்சியில் இணைந்த பிரபு குடும்பம்!

சென்னை (11 பிப் 2021): நடிகர் பிரபுவின் அண்ணனும் நடிகருமான ராம்குமார் பாஜகவில் இணைந்தார். சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார், அவரது மகனுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற சி.டி.ரவி., பா.ஜ.க.வில் இணைந்ததற்காக உறுப்பினர் அட்டையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் நிர்வாகிகள் வி.பி.துரைசாமி,…

மேலும்...