டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட சகோதரர்கள் ஹாஷிம் மற்றும் ஆமிர்!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப் படுகொலையில் கொல்லப்பட்ட அண்ணன் தம்பி இருவரின் உடல் நீண்ட ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாதத்தில் 27 வயது ஆமிரும் அவருடைய தம்பி 17 வயது ஹாஷிமும் இந்தத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது கொடூரத்தின் உச்சம்….

மேலும்...

முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...

பொய் சொல்லவும் ஒரு திறன் வேண்டும் – அமித் ஷாவை விளாசிய விசிக எம்பி ரவிகுமார்!

சென்னை (29 பிப் 2020): “குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை பாதிக்காது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பச்சை பொய்” என்று விசிக எம்பி ரவிகுமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை…

மேலும்...

டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் பாதுகாத்த இந்து கோவில்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவர சூழலில் இந்து (சிவா) கோவிலை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் ஒருபுறம் அமைதி வழி போராட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத மோதலாக மாற்ற முயற்சிக்க இதுவரை 41 பேரை பலி…

மேலும்...

துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்தவர் கைது!

கோவை (28 பிப் 2020): கோவையில் துப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி பெண், கழிவறையை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற ஜோதி, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிடவே, பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார். இதுகுறித்து அந்த பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்….

மேலும்...

டெல்லி வன்முறை மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு(OIC) கண்டனம்!

ஜித்தா (28 பிப் 2020): டெல்லியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைமை காவலரும் ஐபி ஆபிசரும் அடங்குவர். கொடூரமான இந்த வன்முறை நிகழ்வுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன் விளைவாக வியாழன் அன்று (27-2-2020), இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த வன்முறைக்குக் கடும்…

மேலும்...

பிஜேபியின் பொதுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மிரட்டல்!

புதுடெல்லி (28 பிப் 2020): பிஜேபியின் பொதுச் செயலாளர் சந்தோஷ், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி ஸான்டர்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உங்களது தேர்தலில் புகுந்து தில்லுமுல்லு செய்வோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புது டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருந்தார். அதைக் கண்டித்து பெர்னி ஸான்டர்ஸ் கடுமையான முறையில் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்திருந்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்தியைச்…

மேலும்...

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் ஹிந்து சேனா!

புதுடெல்லி (27 பிப் 2020):ஹரியானாவின் குருகிராமில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுள்ள ஊர்வலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் டெல்லியை அடுத்து ஹரியானா…

மேலும்...

ரஜினிக்கு பாஜக கண்டனம்!

சென்னை (27 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையே என்று கூறிய நடிகர் ரஜினியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்….

மேலும்...

டெல்லியில் சாக்கடையிலிருந்து மேலும் இரு உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட உடல்கள் பல இடங்களில் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேலும் இரு உடல்கள் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் தற்போதைய தகவல்படி…

மேலும்...