மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமானில், நேற்று 16 ஏப்ரல்…

மேலும்...
ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)

ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)

துபாய் (12 பிப்ரவரி 2024): ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய்க்கு அடுத்து உள்ளது அல் ஐன். இங்கே வசிக்கும் மக்கள் இன்று அதிகாலை திங்கள்கிழமை விழித்து எழுந்தபோது ஆலங்கட்டி மழை கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர். நேற்று இரவு முழுவதும் பலத்த மழை, இடி மின்னலோடு ஆலங்கட்டி மழை-யும் பெய்தது.  இந்த கனமழையால் அபுதாபி, ராசல் கைமா மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. அல் ஐனில் நேற்று இரவு பெய்த ஆலங்கட்டி மழையால், பாலைவனப்…

மேலும்...

சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில்…

மேலும்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 1) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி…

மேலும்...

சவூதி அரேபியாவில் மழை மற்றும் காற்று வீச வாய்ப்பு!

ரியாத் (12 பிப் 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தபூக், வடக்கு எல்லை, அல்-ஜவ்ஃப், அல்-காசிம், ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை லேசான மழை பெய்யும். ரியாத் மாகாணம் மற்றும் மக்கா, மதீனா, அல்-ஜவ்ஃப், தபூக், வடக்கு எல்லை, ஹைல், அல்-காசிம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளி வரை…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும் எனவும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜித்தாவில் பலத்த மழை பெய்தது. ரியாத் நகரிலும் இதே நிலைதான் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிழக்கு மாகாணம், ரியாத் உள்ளிட்ட…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மக்கா கவர்னரேட் ட்வீட் செய்துள்ளது. மக்கா மாகாணத்தில் அல் குன்ஃபுடா, அல் லைத், அல் அர்டியாத் மற்றும் தாயிப் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல் மஜ்மா, அல் ஜுல்பி, அல்…

மேலும்...

சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (16 ஜன 2023): சவூதி அரேபியாவில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் ரியாத் மற்றும் அல்-காசிசீமில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கா, தபூக் மற்றும் மதீனாவில் லேசான மழை பெய்யும். கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் காலை ஒன்பது மணி வரை பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

துபாய் (11 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகத்தின் வடகிழக்கு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை 16 டிகிரி வரை குறையலாம். பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கனமழையின் போது ஆபத்தான முறையில் ஓட்டப்பட்ட 90 வாகனங்களை துபாய் போலீஸார் பறிமுதல் செய்தனர். அல் ருவையா பகுதியில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய…

மேலும்...

சவூதியில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (08 ஜன 2023): சவுதி அரேபியாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த வாரம் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்கஹ்தானி கூறுகையில், சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாம் இப்போது குளிர்காலத்தின் முதல் காலாண்டில் இருக்கிறோம், அப்போது மழையும் தொடரும், மேலும் வெப்பநிலை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே…

மேலும்...