
ட்ரம்ப், மோடி பேசிக்கொண்டிருந்தபோது ஸ்டேடியத்திலிருந்து கலைந்து சென்ற மக்கள் – வீடியோ!
அஹமதாபாத் (24 பிப் 2020): குஜராத்தில் அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி பேசிக்கொண்டு இருந்தபோது பொதுமக்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர். ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். அப்போது, “எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த…