
ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம்!
ஜம்மு (03 மே 2020): ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்….