கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்தேனா? – நடிகர் அமீர்கான் விளக்கம்!

புதுடெல்லி (05 மே 2020): கோதுமை பாக்கெட்டுக்குள் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவியதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு நடிகர் அமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்கு பெரிதும் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நடிகர் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது. அதில் கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ 15000 ரூபாய் வைத்திருப்பதாக அந்த செய்தியில் விளக்கப்பட்டது. மேலும் இதனை நடிகர் அமீர்கான் தான் செய்தார் என்றும் தகவல் பரவியது….

மேலும்...

மே.7 ஆம் தேதி முதல் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு!

புதுடெல்லி (04 மே 2020): மே 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமானபோக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள்…

மேலும்...

மத உணர்வை காயப்படுத்தியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு!

மும்பை (04 மே 2020): மத உணர்வை காயப்படுத்தியதாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஊடகத்தில் பேசிய அர்ணாப், பந்தாரா ரெயில்வே நிலையம் அருகில் பொது மக்கள் கூடியதாக பேசிய அர்ணாப் கோஸ்வாமி அவசியமில்லாமல் ஜும்மா மசூதியை குறிப்பிட்டு பேசினார். இது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்தது. இதுகுறித்து கல்விச் சங்கத்தின் செயலாளர் இர்ஃபான் அபூபக்கர் சேக் மும்பை பைடோனி காவல்…

மேலும்...

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு (03 மே 2020): ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்….

மேலும்...

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி – மத்திய அமைச்சர் தகவல்!

புதுடெல்லி (03 மே 2020): சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை நிலவி வருகிறது. இந்நிலையில்…

மேலும்...

டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு!

புதுடெல்லி (03 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளத்தில் பதிந்த பதிவு மத உணர்வுகளை தூண்டுவதாக அமைந்ததாகக் கூறி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது போலீசில் புகார் அளித்தார். அதில் இரு சமூத்தினரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், பகைமை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு…

மேலும்...

கொரோனா பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம்!

புதுடெல்லி (02 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று, இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி, கொரோனா பாதிப்புடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். ஆனால் சனிக்கிழமை இரவில்…

மேலும்...

இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள் உதவி!

துபாய் (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் எடையுள்ள மருந்து பொருட்களை அனுப்பி சனிக்கிழமை அன்று வைத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறியதாவது: “கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக போராடும் நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தங்களது முழு ஆதரவை வழங்கி வருகிறது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்…

மேலும்...

கொரோனா எதிரொலி – காய்கறி கடையாக மாறிய நகைக்கடை!

ஜெய்ப்பூர் (02 மே 2020): கொரோனா பரவல் எதிரொலியாக நகைக்கடை வைத்திருந்தவர் அந்த கடையை காய்கறிக் கடையாக மாற்றியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா பொதுமக்களை பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நகைக் கடை வைத்திருந்த சோனி என்பவர். நகைக்கடையை தற்போது காய்கறிக் கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” மக்களுக்கு இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையே அதிகரித்துள்ளது. எனவே எனக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான்…

மேலும்...

இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

புதுடெல்லி (01 மே 2020): இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்து வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்...