ஜனாதிபதி மாளிகையில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

புதுடெல்லி (21ஏப் 2020): இந்திய ஜனாதிபதி தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஒரு பெண் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது, கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்ட அந்த பெண், சிகிச்சைக்காக ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அக்கம் பக்கத்திலுள்ள இரண்டு வீடுகளில் வசிக்கும் மொத்தம் 11 பேர், அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன், வீட்டு தனிமைப்படுத்தலில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் ராஷ்டிரபதி பவனிலேயே பணிபுரியும் கீழ்-செயலாளர் மட்டத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியின்…

மேலும்...

கொரோனாவை பரப்புகிறாயா? – முஸ்லிம் கர்ப்பிணி மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல்!

ஜாம்ஷெட்பூர் (20 ஏப் 2020): ஜார்கண்ட் மாநிலத்தில் ரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண் மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வானா காத்தூன் என்ற 30 வயது பெண் ஒருவர் கருவுற்றிருந்த நிலையில் அவருக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாம்ஷெட்பூர் (எம்ஜிஎம்) மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு மருத்துவம்…

மேலும்...

ஊடகங்கள் மீது நடவடிக்கை – மோடிக்கு நெருக்கடி – முன்னாள் ராணுவ அதிகாரி கடிதம்!

புதுடெல்லி (20 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது குறிவைத்து திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் ராணுவ அதிகாரி கத்ரி கடிதம் எழுதியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஒரு சேர பாதித்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள் கொரோனாவை எப்படி விரட்டுவது என்பதில் கவனம் செலுத்தாமல், கொஞ்சம் கூட…

மேலும்...

கொரோனா பரப்பிவிடுவதாக முஸ்லிம் போல் உடையணிந்து மிரட்டிய இந்துத்வா ரவுடிகள் கைது!

மாண்டியா (20 ஏப் 2020): முஸ்லிம்கள் போல் உடையணிந்து வந்து ‘கொரோனா பரப்பி விடுவோம்’ என மிரட்டிய மூன்று இந்துத்வா ரவுடிகளை மாண்டியா போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள ஒரு காவல்துறை பரிசோதனை மையத்தில், முஸ்லிம்கள் அணியும் நீண்ட பைஜாமா, தொப்பி உள்ளிட்டவை அணிந்து வந்த மூன்று இளைஞர்களை போலீசார் நிறுத்தியுள்ளனர். உடனே அவர்கள், “நாங்கள் முஸ்லிம்கள்; கொரோனாவால் தனிமைப் படுத்தலில் உள்ளோம்; எங்களை கைது செய்ய நினைத்தால் உங்கள் மீது…

மேலும்...

விவசாயம் – மீன்பிடி தொழில்களுக்கு இன்று முதல் அனுமதி!

புதுடெல்லி (20 ஏப் 2020): உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இன்றுமுதல் விவசாயம் மீன்பிடி தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல்வேறு மாநிலங்களில் 26 நாட்களுக்‍கு பிறகு இன்று தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்‍கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

மேலும்...

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி – இரண்டு சாமியார்கள் உட்பட மூன்றுபேர் அடித்துக் கொலை!

மும்பை (20 ஏப் 2020): மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் கிராமத்தில் இரண்டு சாமியார்கள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு சாமியார்கள் கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி…

மேலும்...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புதுடெல்லி (19 ஏப் 2020): மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக்கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்படுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் பரிந்துரைத்து வருகின்றன. எனினும், இந்த மருந்து உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவர்களின் அறிவுரைப்படியே ஹைட்ராக்‍ஸி க்‍ளோரோகுயின்…

மேலும்...

அறிகுறிகள் இல்லாத கொரோனா பாஸிட்டிவ் – மருத்துவத் துறைக்கு தொடரும் சவால்கள்!

புதுடெல்லி (19 ஏப் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தற்போது அதிகமாக கொரோனா பாஸிட்டிவ் என தகவல்கள் வருவது மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் தலைநகர் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 893 பேருக்கு நோய்த்தொற்று உள்ளது. 43 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், தற்போதைக்கு ஊரடங்கை தளர்த்தும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். நேற்று கொரோனா தொற்று உறுதி…

மேலும்...

ரூ 10 கோடி நஷ்ட ஈடு – அவதூறு பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி நோட்டீஸ்!

புதுடெல்லி (19 ஏப் 2020): தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு மவ்லானா சஜ்ஜாத் நோமானி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அரசும் வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...