இந்தியவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா இந்தியா இடையே ஒப்பந்தம்!

புதுடெல்லி (24 பிப் 2020): இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:- இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக…

மேலும்...

டெல்லியில் வன்முறை – போலீஸ் காண்ஸ்டபிள் பலி

டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்ததால் வன்முறை வெடித்தது. டெல்லி போஜ்புர் பகுதியிலில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் இன்றும் சிஏஏ ஆதரவு வன்முறையாளர்கள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

இந்தியா வந்தார் ட்ரம்ப் – பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

அஹமதாபாத் (24 பிப் 2020): இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். ஆமதாபாத் விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11.40க்கு வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரை பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். இசைக் கருவிகள் முழங்க, பல்வேறு கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அமெரிக்க…

மேலும்...

டெல்லி போராட்டக் காரர்களுக்கு பாஜக தலைவர் 3 நாட்கள் கெடு – போலீசுக்கும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லி ஜாஃப்ராபாத் போராட்டக் காரர்கள் மூன்று நாட்களில் கலைந்து செல்ல வேண்டும் என்று பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கெடு விதித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது. இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000…

மேலும்...

CAA எதிர்ப்பு போராட்டத்தில் மீண்டும் வன்முறை, பதற்றம் – போலீஸ் கண்ணீர் புகை வீச்சு!

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது. இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000 த்திக்ற்கும் அதிகமான பெண்கள் டெல்லி மஜூபூர் பகுதியில்…

மேலும்...

இது தேவையா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விளாசும் முன்னாள் நீதிபதிகள்!

புதுடெல்லி (23 பிப் 2020): பிரதமர் மோடியை பாராட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது இந்த பேச்சுக்கு ஓய்வு…

மேலும்...

ரூ 2000 ரூபாய் செல்லாது என்ற தகவல் வதந்தியே – ரிசர்வ் வங்கி தகவல்!

புதுடெல்லி (23 பிப் 2020): ரூ 2000 ரூபாய் செல்லாது என்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே 2000 ரூபாய் நோட்டின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படலாம் என்ற தகவலும் உண்டு. இதனால் மக்கள்…

மேலும்...

அஜ்மீர் தர்காவிற்கு போர்வை வழங்கினார் பிரதமர் மோடி!

புதுடெல்லி (22 பிப் 2020): அஜ்மீர் தர்காவிற்கு பிரதமர் மோடி போர்வை காணிக்கையாக வழங்கினார். ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு, தர்கா நிர்வாக குழுவினரிடம், பிரதமர் போர்வை வழங்கினார். அப்போது மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் உடனிருந்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும்...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண்ணை கொலை செய்தால் ரூ 10 லட்சம் – ராம் சேனா அறிவிப்பு!

பெங்களூரு (22 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண்ணை கொலை செய்தால் ரூ 10 லட்சம் பரிசு என்று ராம்சேனா அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெங்களூரில் குடியுரிமைசட்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அமுல்யா என்ற பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கூட்டத்தில் அசாதுத்தீன் உவைசியும் கலந்து கொண்டார். ஆனால் அந்த பெண்ணின் கோஷத்தை கடுமையாக கண்டித்த உவைசி,…

மேலும்...
shaheen-bagh

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது பழி போட நினைத்து சிக்கிக் கொண்ட போலீஸ்!

புதுடெல்லி (22 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் சாலைகளை ஆக்கிரமித்திருப்பது போராட்டக் காரர்கள் என்று கூறிய போலீஸ் தற்போது அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டதுள்ளது. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஷஹின் பாக் போராட்டம் முதன்மையாக கருதப்படுகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறத்தியும் ஷஹின் பாக்கில் அமைதி வழியில் தொடர்…

மேலும்...