ஒட்டகக் காய்ச்சல் – கத்தார் உலகக் கோப்பை கால்பந்துக்கு ஆபத்தா? உண்மை நிலவரம்!

தோஹா (27 நவ 2022): வளைகுடா நாடான கத்தாரில் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், பிற மேற்கத்திய நாடுகளில் இதுவரை நடந்த உலகக் கோப்பை போல் அல்லாமல் பல கட்டுப்பாடுகளை கத்தார் அரசு விதித்துள்ளது. குறிப்பாக மதுபானம், ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், ஆடைக் குறைப்பு உள்ளிட்டவைகளில் கத்தார் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகள், கத்தார் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி…

மேலும்...

ஜித்தா பெருமழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இழப்பீடு!

ஜித்தா (27 நவ 2022): ஜித்தா மழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சேதம் அடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என சட்ட நிபுணர் முஹம்மது அல் வுஹைபி தெரிவித்துள்ளார். சொத்துக்கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் சேதங்கள் இழப்பீடு பெற தகுதியானவை. விரிவான காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்ட வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு வழங்கப்பட…

மேலும்...

பிரமாண்டமாகத் துவங்கியது கத்தார் உலகக் கால்பந்து போட்டி!

கத்தார் (தோஹா): உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு (21-11-2022) தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக கே-பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கத்தார் மற்றும் எக்வடோர் நாட்டிற்கு இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டிக்கு முன்பாக கத்தார் ரசிகர்கள், அல் கோரில் அமைந்திருக்கும் அல் பைத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு…

மேலும்...

சவுதி விசாவிற்கு இந்தியர்களுக்கு இனி போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லை!

ரியாத் (17 நவ 2022): சவூதி அரேபியாவுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாக்களை முத்திரை குத்துவதற்கு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் விதித்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இனி அவசியமில்லை. முந்தைய இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள சவூதி தூதரகம் திரும்பப் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் மகிழ்ச்சியுடன் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான…

மேலும்...

ஓமன் ஏர் விமானத்தில் ஜம் ஜம் தண்ணீர் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

ஜித்தா (05 நவ 2022): ஜித்தாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் புனித நீரான ஜம்ஜம் தண்ணீரை இலவசமாக எடுத்துச் செல்ல ஓமன் ஏர் விமான நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. கோவிட் காலங்களில் ஜம் ஜம் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பயணிகளும் 5 லிட்டர் ஜம்ஜம் நீர் பாட்டிலை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கவுன்டரில்…

மேலும்...

ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி!

ரியாத் (03 நவ 2022): சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் பேரமைப்பான ரியாத் தமிழ்ச்சங்கம் உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதுபற்றி சங்கத்தின் செயலாளர் ஜியாவுத்தீன் முஹம்மது விடுத்துள்ள அறிக்கையில் “ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் நவம்பர் 15, 2022 வரை நடக்கிறது. உலகளாவிய அளவில் நடைபெறும் இப்போட்டியில் ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினர், குடும்பத்தினர் அல்லாத யாரும் கலந்துகொள்ளலாம். இந்திய மதிப்பில் ₹40,000 வரை பரிசுகள் அளிக்கப்பட…

மேலும்...

சவுதியில் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு அறிவுறுத்தல்!

ஜித்தா (24 அக் 202): சவூதியில் பேருந்து பயணிகளுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பயணிகளின் லக்கேஜ்களில் பெயர் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரை எல்லைகள் வழியாக சவுதி அரேபியாவிற்குள் நுழையும் மற்றும் திரும்பும் பேருந்து பயணிகள் தங்கள் லக்கேஜில் பயணிகளின் பெயர் உட்பட முழு தகவலையும் உள்ளிட வேண்டும். இது தொடர்பாக,…

மேலும்...

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகெரட் விற்பனை செய்யக்கூடாது – சவூதி அரேபியாவில் புதிய சட்டம்!

ஜித்தா (06 அக் 2022): சவூதி அரேபியாவில் திருத்தப்பட்ட புகைத்தல் தடுப்புச் சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது சவூதி ஷூரா கவுன்சில், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புகையிலை பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய சட்டத்தின்படி மசூதிகள், அமைச்சகங்கள், அரசு…

மேலும்...

இஸ்ரேலிய படை பாலஸ்தீனர்களுக்கு இடையே மோதல் – ஒரு பாலஸ்தீனர் சுட்டுக்கொலை!

ரஹ்மல்லா (06 அக் 2022): பாலஸ்தீன் வடக்கு மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகருக்கு வடக்கே உள்ள டெய்ர் அல்-ஹதாப் கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்களுடன் நடந்த மோதலின் போது 21 வயதான நாசர் சாகல் என்ற பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் இருவர் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கத்தின் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். என்று…

மேலும்...

ஆன்லைனில் உம்ரா விசா – வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு!

ஜித்தா (21 செப் 2022): வெளிநாடுகளில் இருந்து மக்கா செல்லும் உம்ரா யாத்ரீகர்கள், மக்காம் தளம் மூலம் உம்ரா விசா பெற முடியும் என, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து உம்ராவிற்கு வருபவர்கள் உம்ரா பயணத்தை முன்பதிவு செய்து தங்கள் சொந்த நாடுகளில் இருந்து உம்ரா விசாவை https://maqam.gds.haj.gov.sa/ மின்னணு தளம் மூலம் பெறலாம். https://maqam.gds.haj.gov.sa/ போர்ட்டலில் உள்நுழைந்து தேவையான சேவைகளை முன்பதிவு செய்து விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு வழங்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி…

மேலும்...