கொரோனா எதிரொலி – ஈரானில் மேலும் 85000 கைதிகள் விடுதலை!

தெஹ்ரான் (17 மார்ச் 2020): சீனா இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. அந்த வகையில் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 11,178 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…

மேலும்...

கத்தாரில் அனைத்து மசூதிகளும் காலவரையறை இன்றி மூடப்பட்டன!

தோஹா (17 மார்ச் 2020): வளைகுடா நாடுகளில் பிரபலமான கத்தார் நாட்டில் அனைத்து மசூதிகளும் இன்று முதல் காலவரையறை இன்றி மூடப்படுகின்றன. தினசரி முஸ்லிம்கள் தொழும் ஐவேளை தொழுகைகள் மட்டுமன்றி, வெள்ளிக் கிழமைக்கான சிறப்புத் தொழுகையும் நிறுத்தப்பட்டது. இதனை அரசு தரப்பில் AWQAF  சற்றுமுன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தார் நாடு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம்…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...

கத்தாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 262 ஆக உயர்வு!

கத்தார் (11 மார்ச் 2020): சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்போரின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். சமீபத்தில், கத்தரில் பணிபுரியும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மளமளவென்று பரவியுள்ளது. இதனால், அக்கட்டிட வளாகத்தில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளதாக கத்தர் அமைச்சகம் அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) பாதிப்படைந்த அனைவருக்கும் தனிமைப்படுத்தப்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – ஈரான் அரசு எடுத்த அதிரடி முடிவு!

தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை…

மேலும்...

சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் மூடல்!

ரியாத் (09 மார்ச் 2020): சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் இன்று (திங்கள் கிழமை) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன. சீனாவிலிருந்து பரவி, உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் பல நாடுகள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சவூதியில் ஏற்கனவே உம்ரா, சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக தடை, விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, சவூதியில் உள்ள அனைத்து…

மேலும்...

இந்திய விமானங்களுக்கு தடை – கத்தார் அதிரடி அறிவிப்பு!

கத்தார் (09 மார்ச் 2020): இன்று அதிகாலை முதல், இந்தியாவிலிருந்து கத்தாருக்குப் புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது கத்தர் அரசு. கொரோனா வைரஸ் (COVID-19) க்கு எதிரொலியாக, தோஹாவிற்கு வந்து செல்லும் பல்வேறு நாட்டு விமானச் சேவைகளை ரத்து செய்து வருகிறது கத்தார். அதன் நீட்சியாக இந்தியா, இத்தாலி, பங்களாதேஷ், சீனா, எகிப்து, ஈரான், இராக், லெபனான், நேபால், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான விமானத் தொடர்பினைத்…

மேலும்...

ஈரானில் 3500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – 107 பேர் பலி!

தெஹ்ரான் (06 மார்ச் 2020): ஈரனில் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 107 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடான…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – மக்கா செல்ல உள்நாட்டு யாத்ரீகர்களுக்கும் தற்காலிக தடை!

ஜித்தா (04 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் முஸ்லிம்களின் புனித இடமான மக்காவிற்கு உள்நாட்டு யாத்ரீகர்கள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கோவிட் – 19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகமெங்கும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக சுகாதார மையம் செய்வதறியாது தவிக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மதீனாவுக்கு உம்ரா யாத்திரை செல்லும்…

மேலும்...

ரியாத்தில் நடந்த ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழா!

ரியாத் (29 பிப் 2020): திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி தமிழகத்தின் பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய அளவில் முன்னாள் மாணவர் சங்கங்களை நடத்தி வருகின்றனர். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ரியாத் பிரிவு கடந்த 20 பிப்ரவரி 2020 அன்று ரியாத்தின் நூஃபா அரங்கில் தனது ஆண்டுவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. ஜமாலியன் ரியாத் தலைவர் ஜியாவுதீன் தலைமை தாங்க, முன்னிலையாக துணைத் தலைவர் மாலிக் இப்ராஹிம், செயலாளர்…

மேலும்...