லண்டன் ஹரே கிருஷ்ணா இஸ்கான் ISKCON ஆலயத்தில் கடுமையான கொரோனா பாதிப்பு!

லண்டன் (07 ஏப் 2020): கொரோனா COVID-19 வைரஸால் இங்கிலாந்திலுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பான இஸ்கான் (ISKCON) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலண்டனிலுள்ள அந்த கோயிலைச் சேர்ந்தவர்களுள் இருபத்தொன்று பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பக்தர்கள் மரணமடைந்துள்ளார்கள். இறந்தவர்களின் பெயர்கள் அவர்களது குடும்பத்தினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்களுள் ஒருவர் பக்தி சாரு சுவாமியின் சீடரான, எழுபது வயதைக் கடந்த ராமேஸ்வர தாஸ் ஆவார். இங்கிலாந்தில் உள்ள பல கோயில்களுக்கு இவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டியுமாவார்….

மேலும்...

உலக தலைவர்களை அச்சுறுத்தும் கொரோனா – பிரிட்டிஷ் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி!

லண்டன் (06 ஏப் 2020): கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வைரஸால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் உலகத் தலைவா்களில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்…

மேலும்...

கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் பலி!

வாஷிங்டன் (06 ஏப் 2020): கொரோனா உலகம் முழுவதும் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 262,217 பேர் குணமடைந்தனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்ததுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 69,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இத்தாலியில் . இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

மேலும்...

கொரோனா ஜிஹாத் தேவையற்ற வதந்தி – அமெரிக்கா கடும் கண்டனம்!

வாஷிங்டன் (05 மார்ச் 2020): கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என்றும் கொரோனா ஜிஹாத் என்பதாகவும் பரவும் வதந்திக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) – மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி விளக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். ஏப்ரல் 2, 2020 நடைபெற்ற அந்நிகழ்வில் உலகெங்கும் மத அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை அந்தந்த நாடுகள் விடுவிக்க…

மேலும்...

கொரோனா பரவல் முடிவுக்கு வருமா? – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம்!

நியூயார்க் (04 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் கணித்துள்ளார். வேதியியலுக்கான 2013 நோபல் பரிசை வென்ற லெவிட், சீனாவில் தொற்றுநோய் பற்றி முன்னரே கணித்து கூறினார். மேலும் பல சுகாதார வல்லுநர்கள் கணிப்பதற்கு முன்பே அதன் பேரழிவு தன்மை குறித்தும் விளக்கி இருந்தார். தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும் போது “பீதியைக் கட்டுப்படுத்துவது…

மேலும்...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!

வாஷிங்டன் (03 ஏப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டர்ம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பின் நாட்களில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிரம்புக்கு கொரோனா…

மேலும்...

ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

ஜெனீவா (02 ஏப் 2020): கொரோனா உயிரிழப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே…

மேலும்...

கொரோனா வைரஸ்: திணறும் வல்லரசுகள் – 40 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

நியூயார்க் (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து தொடங்கி உலகமெங்கும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 41,000 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அதிக உயிரிழப்பை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால்…

மேலும்...

கொரோனா சிகிச்சைக்காக தயாராகும் விளையாட்டு மைதானம்!

நியூயார்க் (31 மார்ச் 2020): நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி!

டொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பிரதமரின் மனைவி சோஃபி பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனர். சோஃபியும் சனிக்கிழமை இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். பேஸ்புக்கில் சோஃபி வெளியிட்ட பதிவில், நான் பாதிக்கப்பட்டிருந்தபோது குணமடைய பிரார்த்தனை செய்த,…

மேலும்...