
கொரோனா வைரஸ் – ஸ்பெயினில் ஒரே நாளில் 100 பேர் மரணம்!
ஸ்பெயின் (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு, நோயின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது. ஐரோப்பாவில், இத்தாலிக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7,753 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயியினில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….