உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா!

புதுடெல்லி (26 டிச 2022): உலகின் சிறந்த உணவுகளில் தர வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில், இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. தேவையான பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. ஜப்பானிய உணவு வகைகள் நான்காவது இடத்தில் உள்ளன. டேஸ்ட்அட்லஸ் விருதுகள்…

மேலும்...

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுடெல்லி (26 டிச 2022): பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ரணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் மற்றும் டோக்லாம் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுகொன்று தொடர்புடையவை. தற்போது பாகிஸ்தானுடன் சீனா பொருளாதார உறவை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவை சீனா தாக்குதவற்கு பாகிஸ்தானுடன் கைகோர்க்கும், இந்தியாவுக்க்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்….

மேலும்...

இந்தியாவில் புதிய மாறுபாடு கொரோனா பாதிப்பு – விமான நிலையங்களில் மீண்டும் கோவிட் பரிசோதனை!

புதுடெல்லி (21 டிச 2022): சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு தொற்று கண்டுடறியப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கோவிட் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது விமான சேவைக்கு எந்த தடையும் இல்லை. இதற்கிடையே சீனாவில் தற்போது பரவி வரும்…

மேலும்...

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி…

மேலும்...

ஷாஜியா மாரி இந்தியாவுக்கு மிரட்டல்!

இஸ்லாமாபாத் (18 டிச 2022): பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஷாசியா மாரி இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தானில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. “பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தேவை ஏற்பட்டால், திரும்பிப் பார்க்காமல் செயல்படுவோம்’ என்று ஷாஜியா தெரிவித்துள்ளார். அதே…

மேலும்...

கச்சா எண்ணை கடும் விலை சரிவு – விலையை குறைக்க கோரிக்கை!

புதுடெல்லி (12 டிச 2022): கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. எனவே கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை ஒன்றிய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மேலும்...
Supreme court of India

எந்த மதத்தையும் யாரிடமும் திணிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (06 டிச 2022): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தில் நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது சத்சங்க நிறுவனரும், இந்து ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகுல் சந்திராவை பரமாத்மாவாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு தனி மனிதரின் புகழுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என மதிப்பிட்ட நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம்…

மேலும்...

சவுதி விசாவிற்கு இந்தியர்களுக்கு இனி போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லை!

ரியாத் (17 நவ 2022): சவூதி அரேபியாவுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாக்களை முத்திரை குத்துவதற்கு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் விதித்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இனி அவசியமில்லை. முந்தைய இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள சவூதி தூதரகம் திரும்பப் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் மகிழ்ச்சியுடன் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான…

மேலும்...

ட்விட்டரிலிருந்து இந்திய ஊழியர்கள் நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி!

புதுடெல்லி (05 நவ 2022): ட்விட்டரில் இந்தியாவில் பணியாளர்களை குறைக்கும் விதமாக பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் தன்வசப்படுத்திய எலான் மஸ்க், அதன் CEO பராக் அகர்வால், அதன் CFO மற்றும் வேறு சில உயர் அதிகாரிகளை நீக்கினார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இன்று தனது ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில், “ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம்…

மேலும்...

கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கடற்படை மீது குற்றச்சாட்டு!

காரைக்கால் (21 அக் 2022): கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தத்போது, ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் காயமடைந்துள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்திய…

மேலும்...