மும்பையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு!
மும்பை (06 ஏப் 2020): மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதித்ததால் அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று வரை 748 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளது. புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர், சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என…
