பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்!
புதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சில வளா்ந்த நாடுகள் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், இந்தியாவிலோ நிலைமை வேறுபட்டதாகும். நாடு தழுவிய ஊரடங்கு தவிர இதர பல்வேறு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டிலுள்ள ஏழை மக்கள் தினசரி வருமானத்தையே…
