இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

புதுடெல்லி (23 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது மதிக்கத்தக்கவர் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை இந்தியாவில் 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

கொரோனா பாதிப்பில் அசுர வேகத்தில் முன்னேறும் அமெரிக்கா!

நியூயார்க் (23 மார்ச் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக நோயாளிகளைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதித்தவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்காவும், ஈரானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெர்மனியும் முன்னிலை வகிக்கின்றன. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு…

மேலும்...

கனடா பிரதமரின் மனைவி பெயரில் பரவும் போலி வீடியோ!

டொராண்டோ (23 மார்ச் 2020): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயர், கொரோனா சிகிச்சை குறித்து பேசுவதாக போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி யையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் சென்று வந்த அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு…

மேலும்...

கொரோனா எதிரொலி – வங்கிகளின் முக்கிய சேவைகள் ரத்து -வேலை நேரம் மாற்றம்!

புதுடெல்லி (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன. அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளள்து. அதாவது, தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும்…

மேலும்...

கொரோனாவுக்கு 18 வயது வாலிபர் பலி!

பிரிட்டன் (23 மார்ச் 2020): பிரிட்டனில் கொரோனாவுக்கு 18 வயது வாலிபர் பலியாகியுள்ளார். எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் 18 வயதுள்ள ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கரோனாவுக்குப் பலியானவர்…

மேலும்...

விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சிலருக்கு தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது. இந்நிலையில், ‘வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்’ என்று தமிழக அரசு, சிலருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டது!

புதுடெல்லி (23 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டுள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் திங்கள் கிழமை காலை வரை உள்ள…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்!

நாகர்கோவில் (22 மார்ச் 2020): நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மரணம் அடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பி வந்த 49 வயதுடைய ஒரு ஆண், 9 மாத குழந்தை, கேரளத்தில் இருந்து வந்த 26 வயதுடைய ஒருவர் 59, 52 வயதுடைய 2 என 5 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பப்பட்டிருந்தது….

மேலும்...

இந்தியாவில் பரவும் கொரோனா – பாதித்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்வு!

புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் 31 வரை ரயில்வே சேவை ரத்து…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

சென்னை (22 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “தமிழகத்தில் புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவிலிருந்து வந்த 63 வயதுப் பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். துபையிலிருந்து வந்த 43 வயது ஆண் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருவரது உடல்நிலையும்…

மேலும்...