இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு மருத்துவர் மரணம்!
இந்தூர் (09 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா…
